3 வயது குழந்தையை உடல் முழுவதும் கடித்துக் கொடுமைப்படுத்திய நபர் கைது – தாயும் போக்சோவில் சிக்கினார்!

கும்பகோணம் அருகே 3 வயது ஆண் குழந்தையின் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் ஏற்படும் அளவுக்குக் கடித்துக் கொடுமைப்படுத்தியதாக யோகராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குத் துணையாக இருந்ததாகக் குழந்தையின் தாய் அட்சயாவையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அட்சயாவின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், யோகராஜுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து குழந்தையிடம் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையின் உடலில் காயங்களைக் கண்ட உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




கருத்துகள் (0)