வெள்ளி, அக்டோபர் 30, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கஞ்சா போதையில் பெற்ற தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்த 19 வயது மகன்!

கஞ்சா போதையில் பெற்ற தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்த 19 வயது மகன்!

 

 

தருமபுரி அருகே கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் தேவராஜ் (19) என்ற இளைஞர், தனது தாயைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி தேவராஜைக் கைது செய்தனர்.

 

விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு போலீசாரைக் கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில் தேவராஜ் சிறைக்குச் சென்றதும், சில தினங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.