பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்..! மனுவை வாங்கி பத்திரமாக வைத்த விஜய்..

சென்னை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கலந்துகொண்டார்.
ஷ்னைடர் எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட நவீன மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அங்கு பயிலும் மாணவ, மாணவியரின் பயிற்சி முறைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து நேரில் கேட்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, கூட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், தன்னால் பேச இயலாது என்பதைச் செய்கை மூலம் முதலமைச்சரிடம் தெரிவித்தார். பின்னர் தனது கோரிக்கை மனுவையும் விஜய்யிடம் நேரடியாக வழங்கினார்.
மாணவரின் நிலையைப் புரிந்துகொண்ட முதலமைச்சர் விஜய், கனிவுடன் அந்த மனுவைப் பெற்றுக்கொண்டதுடன், கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அந்த மனுவை தனது கோட்டின் உள்பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டார்.
தேசிய அளவிலான தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, அவர்களுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்ட முதலமைச்சர் விஜய்யின் இந்த எளிய அணுகுமுறை அங்கிருந்த அதிகாரிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
மாற்றுத்திறனாளி மாணவரின் கோரிக்கையை நேரடியாகப் பெற்றுக்கொண்டு, அதனை பத்திரமாக வைத்துக்கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களால் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.




கருத்துகள் (0)