சனி, நவம்பர் 14, 2026
உண்மையின் குரல்
அரசியல்

அமைச்சர் ராஜேஷ்குமாரின் குடும்பத்தில் சோகம்; மைத்துனர் உடல்நலக்குறைவால் காலமானார்!

அமைச்சர் ராஜேஷ்குமாரின் குடும்பத்தில் சோகம்; மைத்துனர் உடல்நலக்குறைவால் காலமானார்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமாரின் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தும் வகையில், அவரது மைத்துனரும் சகோதரியின் கணவருமான வி. நிர்மல் குமார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மறைந்த நிர்மல் குமாரின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கன்னியாகுமரி மாவட்டம் பெருமரத்துவிளையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் மாறாங்கோணம் கல்லறைத் தோட்டத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. அவரது மறைவுக்கு அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் குடும்பத்தினருக்கு சக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.