குழந்தைகள் தின வாழ்த்து மடலில் நேரு படம் இல்லை: முதல்வரை கிண்டல் செய்த சீமான்!

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட குழந்தைகள் தின வாழ்த்து மடலில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறாதது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலான பதிலுடன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
நேருவின் புகைப்படத்திற்குப் பதிலாக தமிழக முதல்வரின் படம் இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டிய சீமான், "நேரு மாமா இல்லை என்றால் என்ன? பொட்டு மாமா இருக்காரே" என்று நகைச்சுவையாகக் கூறினார். குழந்தைகள் தின வாழ்த்து மடலில் இடம்பெற்ற புகைப்படம் தொடர்பான இந்தக் கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)