அமைதி பேச்சுவார்த்தைக்கு நடுவே உக்ரைன் டிரோன் தாக்குதல்; 9 பேர் பலி! ரஷியா பதிலடி!

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பெரிய அளவில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அபுதாபியில் இரு தரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், ரஷியாவைக் குறிவைத்து உக்ரைன் 1,200-க்கும் மேற்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக ரஷிய ராணுவம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளும் மாறி மாறி நடத்திய தாக்குதல்களில் இதுவரை மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்கள் தொடர்வது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தச் சம்பவங்களால் அமைதி முயற்சிகளில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள அடுத்தகட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுமா அல்லது தாமதமாகுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.




கருத்துகள் (0)