வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
உலகம்

74 நாடுகளில் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடக்கம் – Outlook, Teams பயனர்கள் பாதிப்பு!

74 நாடுகளில் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடக்கம் – Outlook, Teams பயனர்கள் பாதிப்பு!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்வர் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக, உலகம் முழுவதும் 74 நாடுகளில் அந்நிறுவனத்தின் முக்கிய ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக Outlook, Teams, Copilot உள்ளிட்ட சேவைகள் செயல்படாமல் போனதால், அவற்றைப் பயன்படுத்தி வந்த கோடிக்கணக்கான பயனர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 

இந்தத் திடீர் பாதிப்பால் கார்ப்பரேட் நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் அன்றாடப் பணிகளும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்தப் பிரச்சினைக்கு சைபர் தாக்குதல் காரணமல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ஆசிய-பசிபிக், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட சேவைகள் படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.