பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட விங் கமாண்டர் கைது!

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் அனுப்பிய ஆபாசப் புகைப்படங்களுக்கு பதிலாக, இந்திய விமானப்படையின் முக்கிய ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்ததாக விங் கமாண்டர் ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பாதுகாப்புத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட அதிகாரி, விமானப்படையின் டிரோன் பிரிவு தொடர்பான கட்டமைப்பு, போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் ராணுவப் பயிற்சிகள் குறித்த விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை வெளிநாட்டு உளவு அமைப்புக்கு கசியவிட்டதாகக் கூறப்படுகிறது. பெண் ஒருவர் அனுப்பிய புகைப்படங்களைப் பயன்படுத்தி அவரை உளவு வலையில் சிக்க வைத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, மேலும் ராணுவத் தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளனவா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)