சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
உலகம்

அமெரிக்க விமானப் படையின் 'கிளவுட் ஒன்' தளத்தில் சைபர் தாக்குதல் – ரகசியத் தகவல்கள் திருடப்பட்டதா?

அமெரிக்க விமானப் படையின் 'கிளவுட் ஒன்' தளத்தில் சைபர் தாக்குதல் – ரகசியத் தகவல்கள் திருடப்பட்டதா?


அமெரிக்க விமானப் படையின் முக்கிய தொழில்நுட்பத் தளமான 'கிளவுட் ஒன்' (Cloud One) மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளின்போது இந்தப் பாதுகாப்பு ஊடுருவல் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க விமானப் படையின் முக்கிய தரவுகளை நிர்வகிக்கும் இந்தத் தளத்தில், விமானப் படை வீரர்களின் தனிப்பட்ட விவரங்கள், ஊதியம் தொடர்பான தகவல்கள் மற்றும் வான் பாதுகாப்பு ரேடார் தரவுகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார், இதன் மூலம் முக்கியமான ரகசியத் தகவல்கள் ஏதேனும் திருடப்பட்டுள்ளனவா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில், சைபர் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க விமானப் படையிடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், அத்தரப்பு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.