தாயின் இறுதிச்சடங்கிற்காக 5 மணி நேர பரோல்.. விலங்குடன் உடலை சுமந்த சிறைக்கைதி!

வங்கதேசத்தில் உயிரிழந்த தனது தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிறைக்கைதி ஒருவருக்கு 5 மணி நேரம் பரோல் வழங்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அவர் இறுதிச்சடங்கில் பங்கேற்ற விதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஜெனைதா மாவட்டத்தைச் சேர்ந்த ரிப்பன் மல்லிக் என்ற சிறைக்கைதி, தனது தாயின் மரணத்தைத் தொடர்ந்து இறுதிச்சடங்கு செய்வதற்காக 5 மணி நேர அனுமதியுடன் போலீஸ் பாதுகாப்பில் அழைத்து வரப்பட்டார். அப்போது அவரது கைகளில் விலங்கு பூட்டப்பட்டிருந்ததுடன், இடுப்பிலும் கயிறு கட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே அவர் தனது தாயின் உடலை தோளில் சுமந்து இறுதிச்சடங்குகளை மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஒரு மகன் தனது தாயின் இறுதிச்சடங்கைச் செய்யும்போது இத்தகைய கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைதிகளின் பாதுகாப்பு நடைமுறைகளுக்கும் மனிதாபிமான அணுகுமுறைக்கும் இடையிலான விவாதத்தை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.




கருத்துகள் (0)