சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
உலகம்

நைஜரில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. பாதுகாப்புப் படை வீரர்கள் 13 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்!

நைஜரில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. பாதுகாப்புப் படை வீரர்கள் 13 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நைஜரின் மேற்கு பகுதியில் உள்ள தில்லாபெரி மாகாணம், சனம் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமை குறிவைத்து வியாழக்கிழமை அதிகாலை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதக் குழுவினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

 

இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் பலர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் பல தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்த தளவாடங்கள் அழிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

நைஜரில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.