ஞாயிறு, அக்டோபர் 25, 2026
உண்மையின் குரல்
உலகம்

அமெரிக்காவில் தெலங்கானா மாணவி திடீர் மரணம்: வேலைக்குச் செல்லத் தயாரான நிலையில் சோகம்!

அமெரிக்காவில் தெலங்கானா மாணவி திடீர் மரணம்: வேலைக்குச் செல்லத் தயாரான நிலையில் சோகம்!

 

 

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் அல்பானியில், தெலங்கானாவைச் சேர்ந்த நள்ளமலா அக்ஷிதா (25) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றிருந்த அவர், அண்மையில் அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்லத் தயாராக இருந்தார்.

 

இந்நிலையில், இரவு உணவுக்குப் பிறகு வீட்டிற்கு வெளியே நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அக்ஷிதா திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். படிப்பை முடித்து எதிர்கால வாழ்க்கையைத் தொடங்கத் தயாராக இருந்த இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.