வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
வேலைவாய்ப்பு

கரூரில் டிசம்பர் 6-ம் தேதி இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

கரூரில் டிசம்பர் 6-ம் தேதி இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

கரூர் மாவட்டத்தில் வேலை தேடும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

 

இந்த முகாம் கரூரில் உள்ள சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். வேலை தேடும் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் இந்த முகாமில் பங்கேற்கலாம். முகாமில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் இல்லை.

 

வேலை தேடுவோர் முன்பதிவு மற்றும் தொடர்புக்கு: 84899 04770

 

வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் முன்பதிவு செய்ய: 84899 04740

 

இந்த வேலைவாய்ப்பு முகாமை YOUTH POINT ஏற்பாடு செய்துள்ளது. வேலை தேடும் நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.