அனிருத் – காவ்யா மாறன் சொத்து மதிப்பு எவ்வளவு? யார் அதிக வசதி படைத்தவர்?

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரது பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில், அனிருத் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் தொடர்புடைய காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் குறித்த தகவல்கள் பேசப்பட்டு வரும் நிலையில், இருவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களும் கவனம் பெற்றுள்ளன. இவர்களது திருமணம் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க அனிருத் சுமார் ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. இசைக் கச்சேரிகள் மற்றும் விளம்பரங்கள் மூலமாகவும் அவர் வருமானம் ஈட்டி வருகிறார். இதன் அடிப்படையில், அவரது சொத்து மதிப்பு ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனின் சொத்து மதிப்பு சுமார் ரூ.1,331 கோடி எனக் குறிப்பிடப்படுகிறது.




கருத்துகள் (0)