ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் நடித்த காட்சிகள் நீக்கம்? ரசிகர்கள் மத்தியில் எழுந்த விவாதம்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தொடர்பான புதிய தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சந்தானம் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்துடன் சந்தானம் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தும், அவை இறுதிப் படத்தில் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் நீளம் மற்றும் திரைக்கதையின் வேகத்தைக் கருத்தில் கொண்டு, சந்தானம் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.




கருத்துகள் (0)