சனி, நவம்பர் 14, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

ஆன்லைன் பண மோசடிகளில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? சைபர் கிரைம் போலீசார் முக்கிய எச்சரிக்கை!

ஆன்லைன் பண மோசடிகளில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? சைபர் கிரைம் போலீசார் முக்கிய எச்சரிக்கை!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, வங்கிக் கணக்கு தொடர்பான OTP, UPI ரகசிய எண், டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் தனிப்பட்ட வங்கித் தகவல்களை தொலைபேசி வாயிலாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ யாரிடமும் பகிரக்கூடாது என எச்சரித்துள்ளனர். மேலும், அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்குரிய இணையதள லிங்குகளைத் திறப்பதையும், அவற்றைக் கிளிக் செய்வதையும் தவிர்க்க வேண்டும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற விளம்பரங்கள், போலியான பரிசுத் திட்டங்கள் மற்றும் நம்ப முடியாத முதலீட்டு வாய்ப்புகள் மூலம் மோசடி நடைபெற வாய்ப்புள்ளதால் அவற்றை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். ஒருவேளை இதுபோன்ற இணையவழி மோசடியில் பணத்தை இழக்க நேரிட்டால், தாமதிக்காமல் தேசிய சைபர் குற்ற உதவி எண்ணான 1930-ஐ தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். மேலும், www.cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் புகாரைப் பதிவு செய்து உரிய நடவடிக்கைக்கு வழிவகை செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.