அன்பில் மகேஷ் கைது: உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதனைச் சர்க்கஸ் ஆட்சி என விமர்சித்த அவர், அன்பில் மகேஷ் சட்டப்படி இந்தச் சூழலை எதிர்கொண்டு மீண்டு வருவார் என்றும் தெரிவித்துள்ளார்.
வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் திமுகவினரை அடக்கிவிட முடியாது என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அன்பில் மகேஷ் கைது விவகாரம் தொடர்பாக திமுக தரப்பில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.




கருத்துகள் (0)