திங்கள், அக்டோபர் 26, 2026
உண்மையின் குரல்
அரசியல்

அன்பில் மகேஷ் கைது: காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதம்!

அன்பில் மகேஷ் கைது: காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதம்!

 

 

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (அக்.26) கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 

இதையடுத்து, அங்கு வந்த திமுகவைச் சேர்ந்த சேகர்பாபு உள்ளிட்டோர் போலீசாரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் ஒரே மாதிரியான பதிலை அளிக்காமல், மாறி மாறிப் பேசுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.