அன்பில் மகேஷ் வழக்கில் சரவணன் என்பவர் நீதிமன்றத்தில் சரண்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய முத்துக்குமார் நீதிமன்றத்தில் ஏற்கனவே சரணடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த சரவணன் என்பவர் இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனிடையே ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.




கருத்துகள் (0)