டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 ரன்கள் அடிப்பார் வைபவ் சூர்யவன்ஷி.. கெவின் பீட்டர்சன் கணிப்பு!

இந்திய கிரிக்கெட்டின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, எதிர்காலத்தில் Test கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை படைப்பார் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கணித்துள்ளார்.
UAE A அணிக்கு எதிரான Rising Stars ஆசிய கோப்பை போட்டியில் 53 பந்துகளில் 204 ரன்கள் விளாசி உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்த வைபவின் ஆட்டம் பல முன்னாள் வீரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் போட்டியில் அவர் 28 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். வெறும் 28 பந்துகளில் சதம் அடித்ததுடன், 52 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டினார்.
இந்த அதிரடியான ஆட்டத்தைப் பார்த்த கெவின் பீட்டர்சன், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வைபவ் சூர்யவன்ஷி Test போட்டியில் 500 ரன்கள் அடிப்பார் என தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த கணிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Test கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 400 ரன்கள் அடித்த சாதனை பிரையன் லாராவிடம் உள்ளது. இந்நிலையில், வைபவ் எதிர்காலத்தில் 500 ரன்கள் அடிப்பார் என்ற பீட்டர்சனின் கணிப்பு தற்போது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.




கருத்துகள் (0)