வெள்ளி, அக்டோபர் 30, 2026
உண்மையின் குரல்
அரசியல்

அன்பில் மகேஷுக்கு சிறையில் மருத்துவ வசதிகள் செய்து தரப்படும் – நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

அன்பில் மகேஷுக்கு சிறையில் மருத்துவ வசதிகள் செய்து தரப்படும் – நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

 

 

புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஷுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்படும் என தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிறையில் தனக்குத் தேவையான மருந்துகள் முறையாக வழங்கப்படுவதுடன், வீட்டு உணவும் அளிக்கப்பட வேண்டும் என அன்பில் மகேஷ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

 

இதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், அன்பில் மகேஷுக்கு சிறையில் தேவையான மருத்துவ வசதிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், அவருக்கு வீட்டு உணவு வழங்குவது தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.