சனி, நவம்பர் 14, 2026
உண்மையின் குரல்
ஆன்மிகம்

சபரிமலை பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச காப்பீடு; பிரீமியம் தொகையை ஏற்கும் தேவசம் போர்டு!

சபரிமலை பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச காப்பீடு; பிரீமியம் தொகையை ஏற்கும் தேவசம் போர்டு!

சபரிமலைக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 லட்சம் மதிப்பிலான இலவச காப்பீடு வழங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

 

ஆன்லைன் முன்பதிவு வாயிலாக வருபவர்கள் மட்டுமின்றி, நேரடியாக ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பக்தர்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையான ரூ.1.5 கோடியை திருவிதாங்கூர் தேவசம் போர்டே முழுமையாக செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.