செல்வம் பெருக வீட்டில் செய்ய வேண்டிய எளிய மகாலட்சுமி வழிபாடு.. 108 முறை சொல்ல வேண்டிய மந்திரம்!

வீட்டில் செல்வ வளம் பெருகவும், பொருளாதார நிலை மேம்படவும் மகாலட்சுமியின் அருளைப் பெற எளிய முறையில் வழிபாடு செய்யலாம் என ஆன்மிக மரபில் கூறப்படுகிறது. இதற்காக முதலில் ஒரு வெற்றிலையை பன்னீரில் சுத்தம் செய்து, அதன் நடுப்பகுதியில் வட்ட வடிவில் சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும்.
பின்னர் அந்த வெற்றிலையை ஒரு தாம்பாளத் தட்டில் வைத்து மகாலட்சுமியின் திருவுருவமாகக் கருதி வழிபட வேண்டும். தொடர்ந்து மலர்கள், அட்சதை அல்லது நாணயங்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, 'ஓம் தன தான்யாதிபதயே நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை பக்தியுடன் உச்சரிக்க வேண்டும். இவ்வாறு நம்பிக்கையுடன் வழிபடுவது செல்வ வளத்தையும் பொருளாதார முன்னேற்றத்தையும் அளிக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும்.




கருத்துகள் (0)