சென்னையில் நாளை வாக்காளர் சிறப்பு முகாம்!..

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 4,079 வாக்குச்சாவடி மையங்களில் அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியானவர்கள் மற்றும் முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வாக்குச்சாவடி மையத்திற்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கருத்துகள் (0)