சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

நிலத்தகராறில் கொலை: 4 பேருக்கு ஆயுள் தண்டனை!..

நிலத்தகராறில் கொலை: 4 பேருக்கு ஆயுள் தண்டனை!..

திருநெல்வேலி வீரவநல்லூர் பகுதியில் 2017-ம் ஆண்டு பழனிகுமார்(எ) துரைபாண்டி என்பவரை நிலத்தகராறு காரணமாக கொலை செய்த வழக்கில், மணிகண்டன், உதயகாந்த், வேல்துரை(எ) பார்த்திபன் மற்றும் கோபு ஆகிய 4 பேருக்கு திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வம் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். IPC 302-ன்படி ஆயுள் தண்டனை, IPC 506(i)-ன்படி 7 ஆண்டுகள் சிறை, IPC 449-ன்படி 9 ஆண்டுகள் சிறை தண்டனைகள் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.