ஞாயிறு, அக்டோபர் 25, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உயர்வு! ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரை கடன் பெறலாம்!

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உயர்வு! ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரை கடன் பெறலாம்!

 

 

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தங்க நகைக்கடனுக்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை கடன் பெறலாம். அதேநேரத்தில், நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என்ற வரம்பும் பொருந்தும். இதற்கு முன்பு ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.

 

இந்த புதிய உயர்வு, புதிதாக நகைக்கடன் பெறுபவர்களுக்கு மட்டுமின்றி, ஏற்கெனவே கடன் பெற்று புதுப்பிப்பவர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் தொகை நகையின் மதிப்பு மற்றும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளைப் பொறுத்து மாறுபடும். கடன் பெற விரும்புவோர் அருகிலுள்ள கூட்டுறவு வங்கியை அணுகி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.