வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
இந்தியா

சொட்டுநீர் பாசனத்திற்கு 100% மானியம்! சிறு, குறு விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சிறப்புச் சலுகை!

சொட்டுநீர் பாசனத்திற்கு 100% மானியம்! சிறு, குறு விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சிறப்புச் சலுகை!

விவசாயத்தில் தண்ணீர் பயன்பாட்டைக் குறைத்து, பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நீர்ப்பாசனக் கருவிகள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்த சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன், பயிர்களுக்குத் தேவையான நீரை முறையாக வழங்கி உற்பத்தித் திறனை மேம்படுத்த இந்தத் திட்டம் உதவியாக இருக்கும். இச்சலுகையைப் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பட்டா, சிட்டா, அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நீர்ப்பாசன வசதிகளை மானியத்தில் அமைத்துக்கொள்ளலாம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.