வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
இந்தியா

இன்று முதல் அமுல் பால் விலை உயர்வு! லிட்டருக்கு ரூ.4 வரை அதிகரிப்பு – புதிய விலை விவரம்!

இன்று முதல் அமுல் பால் விலை உயர்வு! லிட்டருக்கு ரூ.4 வரை அதிகரிப்பு – புதிய விலை விவரம்!

அமுல் பால் பொருட்களை விற்பனை செய்து வரும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (GCMMF), பால் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பால் வகைகளைப் பொறுத்து லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை விலை அதிகரிக்கிறது.

 

புதிய விலை மாற்றத்தின்படி, அமுல் தாஜா (Toned Milk) பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், அமுல் கோல்டு (Gold Milk) பாலின் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

பால் உற்பத்தி, பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஏற்படும் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதே இந்த விலை மாற்றத்திற்குக் காரணம் என்று நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள சூழலில், அதனை ஈடுசெய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.