சொத்துப் பிரச்னை.. நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை!..

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தில், சொத்துப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் முத்துக்காளை (30) என்ற இளைஞர் அரிவாளால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். கடந்த 9ஆம் தேதி காலை, அவரது தாய்மாமா தாமஸ்பாண்டியன் (39), உறவினர் அஜீத்குமார் (28) ஆகியோர் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த முத்துக்காளை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)