சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தேனி அருகே கோர விபத்து: இளம்பெண் பலி; டிராக்டர் ஓட்டுநர் படுகாயம்!

தேனி அருகே கோர விபத்து: இளம்பெண் பலி; டிராக்டர் ஓட்டுநர் படுகாயம்!

 

 

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மற்றும் கார் மீது மோதியதில், காரில் பயணித்த 23 வயதான தமயந்தி என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் டிராக்டர் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.

 

விபத்தில் காயமடைந்த டிராக்டர் ஓட்டுநர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்து நடந்த விதம் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.