எடை குறைக்க பிரெட் சாப்பிடலாமா? எந்த வகையைத் தேர்வு செய்வது முக்கியம்!

பிரெட் சாப்பிடுவதால் மட்டும் உடல் எடை குறைந்துவிடாது. எந்த வகையான பிரெட்டைத் தேர்வு செய்கிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம் என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மைதாவால் தயாரிக்கப்படும் வெள்ளை பிரெட்டில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அதை அதிகமாகச் சாப்பிடுவது கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கலாம். அதேசமயம், முழுதானியப் பிரெட்டில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவும்.
உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புவோர், முழுதானியப் பிரெட்டைச் சரியான அளவில் எடுத்துக்கொண்டு, அதனுடன் முட்டை போன்ற புரத உணவுகள் மற்றும் காய்கறிகளையும் சேர்த்துச் சாப்பிடலாம். பிரெட் மட்டுமே உடல் எடையைக் குறைக்கும் என்ற எண்ணத்தைத் தவிர்த்து, மொத்த உணவின் அளவு, ஊட்டச்சத்து மற்றும் தினசரி உடல் இயக்கம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவது அவசியம்.




கருத்துகள் (0)