ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 171 அப்ரன்டீஸ் பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் (HCL) காலியாக உள்ள 171 அப்ரன்டீஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி பெற விரும்பும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மலஞ்ச்கண்ட் காப்பர் திட்டத்தின் கீழ், மொத்தம் 19 தொழிற்பிரிவுகளில் இந்தப் பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 25 வரை இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்களில் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பயிற்சிக் காலத்தில் அரசு விதிமுறைகளின்படி உதவித்தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் தகுதியுடைய இளைஞர்கள் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பில் உள்ள நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளைப் பார்த்து விண்ணப்பிக்கலாம்.




கருத்துகள் (0)