தமிழ்நாடு மின்வாரியத்தில் 500 அப்ரண்டிஸ் பணியிடங்கள்.. மாதம் ரூ.10,900 உதவித்தொகை!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) டிப்ளமோ முடித்தவர்களுக்காக 500 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்தப் பயிற்சி வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு கிடையாது. விண்ணப்பதாரர்களின் கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஓராண்டு கால பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.10,900 உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்பும் டிப்ளமோ முடித்தவர்கள் தேசிய அப்ரண்டிஸ் பயிற்சி இணையதளமான nats.education.gov.in மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். தகுதியுடையவர்கள் நவம்பர் 28ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புவோர் கடைசி தேதிக்கு முன்பாக விண்ணப்பிப்பது அவசியம்.




கருத்துகள் (0)