ஞாயிறு, அக்டோபர் 25, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

இனி மின் மீட்டர் போட்டோ எடுத்தாலே போதும்! மின்கட்டணத்தை நீங்களே கணக்கிடலாம்!

இனி மின் மீட்டர் போட்டோ எடுத்தாலே போதும்! மின்கட்டணத்தை நீங்களே கணக்கிடலாம்!

 

 

தமிழக மின் நுகர்வோர் தங்களது மின் மீட்டர் அளவீட்டைத் தாங்களே பதிவு செய்து மின்கட்டணத்தைப் பெறும் புதிய வசதியை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியில் ‘சுய கணக்கீடு’ வசதி சேர்க்கப்பட உள்ளது. நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணைப் பதிவிட்டு, மீட்டர் அளவீட்டைப் புகைப்படம் எடுத்து பதிவேற்றினால், மென்பொருள் இரு மாத மின் பயன்பாட்டைக் கணக்கிட்டு கட்டணப் பட்டியலை உருவாக்கும்.

 

முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் சோதனை அடிப்படையில் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, டிசம்பர் மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மின் அளவீட்டில் ஏற்படும் தாமதம் மற்றும் தவறான கட்டணக் கணக்கீடு தொடர்பான புகார்களைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த வசதி நடைமுறைக்கு வரும்போது, நுகர்வோர் தங்களது மின் பயன்பாட்டை எளிதாகக் கண்காணிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.