ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இருப்பிடத்தை பகிரும் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இருப்பிடத்தை பகிரும் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

வாட்ஸ்அப் பயனர்கள் தங்களின் இருப்பிடத்தை ஸ்டேட்டஸ் மூலமாகவே நேரடியாகப் பகிரும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், பயனர்கள் தாங்கள் இருக்கும் இடம் அல்லது வேறு இடங்களை ஸ்டேட்டஸில் எளிதாகப் பகிர முடியும்.

 

இந்த புதிய வசதியில் வரைபடத்தில் விரும்பிய இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடத்தின் முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் வரைபட வடிவிலான அட்டையை ஸ்டேட்டஸில் பதிவிடலாம். இதனால், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தெரிவிப்பது எளிதாக இருக்கும்.

 

மேலும், தங்களின் சரியான இருப்பிடத்தை வெளிப்படுத்த விரும்பாத பயனர்களுக்கு தோராயமான இடத்தை மட்டும் பகிரும் வசதியும் வழங்கப்பட உள்ளது. தனியுரிமையை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் இந்த அம்சம், விரைவில் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.