வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
வேலைவாய்ப்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 500 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு! தமிழகத்திற்கு 38 இடங்கள் ஒதுக்கீடு!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 500 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு! தமிழகத்திற்கு 38 இடங்கள் ஒதுக்கீடு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பைப்லைன்ஸ் பிரிவில் காலியாக உள்ள 500 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 38 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு நிறுவனத்தில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

 

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், 12ஆம் வகுப்பு, டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள் 2026 டிசம்பர் 5 என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.