ரயில்வேயில் 191 காலிப்பணியிடங்கள்.. 12ம் வகுப்பு முதல் முதுகலை வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) சார்பில் பல்வேறு பிரிவுகளில் 191 காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தலைமை சட்ட உதவியாளர், அரசு வழக்கறிஞர், மூத்த விளம்பர ஆய்வாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர், பணியாளர் மற்றும் நல ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த வேலைவாய்ப்புகளுக்கு பதவிகளின் தன்மைக்கு ஏற்ப 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் எல்.எல்.பி., முதுகலை பட்டம் மற்றும் எம்.பி.ஏ. படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் பணிபுரிய விரும்பும் தகுதியுடையவர்கள் டிசம்பர் 4-ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நடைமுறை மற்றும் கூடுதல் விவரங்களை அறிய https://www.rrbapply.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.




கருத்துகள் (0)