இந்தூரில் 8-வது மாடியிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு: காதலனிடம் போலீசார் விசாரணை!

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி என்ற பெண், குடும்பப் பிரச்சினைகள் காரணமாகக் கணவர் மற்றும் மகனைப் பிரிந்து, அஜய் என்ற தனது காதலருடன் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணவரின் சமூக வலைதளப் பதிவு தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அஜய்யுடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது, குடியிருப்பின் எட்டாவது மாடியிலிருந்து அஞ்சலி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மரணத்தின் சூழல் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதால் அஜய்யைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில்தான் சம்பவத்தின் முழுப் பின்னணி தெரியவரும்.




கருத்துகள் (0)