புதன், நவம்பர் 11, 2026
உண்மையின் குரல்
அரசியல்

ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் மேல்முறையீடு!

ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் மேல்முறையீடு!

தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரத்தில் லஞ்சம் பெற்ற புகாரில் சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாக கூறி, சென்னை சிறப்பு நீதிமன்றம் நேற்று அன்பில் மகேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.