கச்சா எண்ணெய் விலை 32% சரிவு; மீண்டும் உபரி ஏற்படும் என கணிப்பு!

உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை 2026-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மீண்டும் உபரி நிலையை அடையும் என சர்வதேச எரிசக்தி முகமை (IEA) கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி படிப்படியாகச் சீரடைந்து வருவதால், அக்டோபர் மாதத்தில் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் தேவையை விட அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் தாக்கமாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 136 டாலரிலிருந்து சுமார் 32 சதவீதம் குறைந்து 93 டாலராகச் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் விநியோகம் அதிகரித்து வருவது சந்தையில் விலை மாற்றங்களுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், 2027-ம் ஆண்டில் உலகளாவிய கச்சா எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு 10.43 கோடி பீப்பாய்களாக மட்டுமே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் தேவையை விட விநியோகம் அதிகரித்து எண்ணெய் சந்தையில் உபரி நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)