அமெரிக்காவில் 129 பயணிகளுடன் சென்ற சொகுசு கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து: 32 பேர் காயம்!

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகருக்கு அருகே மிஸ்ஸிஸிப்பி ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்த சொகுசு கப்பல் மீது சரக்கு கப்பல் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 129 பேருடன் சென்றுகொண்டிருந்த 'அமெரிக்கன் ஹெரிடேஜ்' என்ற சொகுசு கப்பல் மீது 'அட்லாண்டிக் ஆஸ்பால்ட்' என்ற சரக்கு கப்பல் மோதியது. இந்த மோதலின் தாக்கத்தால் சொகுசு கப்பல் ஒருபக்கமாகச் சாய்ந்தது.
இதையடுத்து கப்பலுக்குள் சிக்கியிருந்த 32 பேர் மீட்புக் குழுவினரால் பத்திரமாக வெளியே கொண்டுவரப்பட்டனர். அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு பயணிகளை மீட்டதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.




கருத்துகள் (0)