6 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய குன்னூர் மலைப்பாதை பேருந்து சேவை!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 6 நாட்களாக அரசு பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தற்போது மழை குறைந்துள்ளதைத் தொடர்ந்து, மலைப்பாதைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இன்று முதல் அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக காலை முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)