கார் சென்சார் அலாரம் சத்தத்தால் ஆத்திரம்.. ரூ.3.5 லட்சம் காருக்குத் தீ வைத்த பக்கத்து வீட்டுக்காரர்!

குஜராத் மாநிலம் மோர்பியில் வழக்கறிஞர் புஷ்பா பட் என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள கார் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சிகர் ஜெயேஷ் கோகேல் என்பவர் காருக்குத் தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரித்தபோது, காரின் சென்சார் அலாரம் தொடர்ந்து அதிக சத்தத்துடன் ஒலித்ததால் ஏற்பட்ட எரிச்சலில் தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.




கருத்துகள் (0)