வெள்ளி, அக்டோபர் 30, 2026
உண்மையின் குரல்
இந்தியா

செல்போன் பயன்படுத்தியதால் 14 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்!

செல்போன் பயன்படுத்தியதால் 14 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்!

 

 

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கோத்தூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண், அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதற்காகத் தனது 14 வயது மகள் சுவர்ச்சலாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார்.

 

இதற்கிடையே, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சந்தேகம் எழுந்ததால் போலீசார் விஜயலட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மகள் தனது பேச்சைக் கேட்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.