எண்ணூரில் குறைந்த கடல் சீற்றம்; குடியிருப்புகளுக்குள் புகுந்த கடல் நீர்!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே அர்னாப் புயல் கரையைக் கடந்ததாகக் கூறப்படும் நிலையில், வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் படிப்படியாகக் குறைந்துள்ளது. இதற்கு முன்பு எண்ணூர் பகுதியில் கடல் கடுமையாகக் கொந்தளித்ததால், கடற்கரையோரக் குடியிருப்புகளுக்குள் அதிகளவில் கடல் நீர் புகுந்தது.
மேலும், வேகமாக எழுந்த ராட்சத அலைகளால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் கவிழ்ந்து சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)