திங்கள், அக்டோபர் 26, 2026
உண்மையின் குரல்
இந்தியா

காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறிய இளம்பெண்!

காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறிய இளம்பெண்!

 

 

உத்தரப் பிரதேச மாநிலம் பக்ரை பகுதியில், நூருதீன் என்ற இளைஞரைக் காதலித்த 18 வயது சைதா, குடும்பத்தினரின் எதிர்ப்பால் மனமுடைந்து சுமார் 80 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று இளம்பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

பின்னர் இரு குடும்பத்தினரையும் அழைத்து காவல்துறையினர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மும்பையில் இருந்த காதலனுடன் வீடியோ அழைப்பு மூலம் இணையவழித் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. குடும்ப எதிர்ப்பால் இளம்பெண் கோபுரத்தில் ஏறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.