வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பாரத் நகர் பகுதியில் ஆயிஷா சித்திக் என்ற 26 வயது பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது. வீட்டில் வாட்டர் ஹீட்டர் மூலம் சூடாக்கப்பட்ட தண்ணீரை எடுக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு ஏற்பட்டதா அல்லது வேறு காரணத்தால் விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒரு வயது குழந்தையின் தாயான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)