கேஸ் அடுப்பில் மஞ்சள் நிற தீ எரிந்தால் அலட்சியம் வேண்டாம் ஆபத்து ஏற்படலாம்!

வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் அடுப்பில் தீ நீல நிறத்தில் எரிவது சரியான எரிதலுக்கான அறிகுறியாகும். ஆனால், தீ மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் எரிந்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் கவனிக்க வேண்டும். இது எரிவாயு முழுமையாக எரியாமல் இருப்பதைக் குறிக்கலாம்.
எரிவாயு முழுமையாக எரியாதபோது, கார்பன் மோனாக்சைடு என்ற நிறமற்ற, மணமற்ற நச்சு வாயு உருவாக வாய்ப்புள்ளது. இந்த வாயுவை சுவாசிப்பது உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
கேஸ் அடுப்பின் பர்னர் துளைகளில் உணவுத் துகள்கள், எண்ணெய் மற்றும் அழுக்குகள் படிந்து அடைப்பை ஏற்படுத்துவதால் தீயின் நிறம் மாறலாம். எனவே, அடுப்பில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற தீ தென்பட்டால், அடுப்பை அணைத்து முழுமையாக ஆறிய பிறகு பர்னரை சுத்தம் செய்வது அவசியம். தொடர்ந்து இதே பிரச்சினை ஏற்பட்டால் கேஸ் அடுப்பை தொழில்நுட்ப நிபுணரிடம் பரிசோதிக்க வேண்டும்.




கருத்துகள் (0)