வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

6 மாத குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா? எவ்வளவு கொடுக்க வேண்டும்?

6 மாத குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா? எவ்வளவு கொடுக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு 6 மாதங்கள் நிறைவடைந்து திட உணவுகளை அறிமுகப்படுத்தும் காலத்தில், ஊட்டச்சத்து நிறைந்த முட்டையையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். முட்டையில் உள்ள புரதம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

 

ஆரம்பத்தில் நன்கு வேகவைத்த முட்டையை சிறிய அளவில், அதாவது ஒரு டீஸ்பூன் அளவுக்கு மசித்து கொடுக்கலாம். மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக்கரு இரண்டையும் நன்றாக வேகவைத்து மென்மையான பதத்தில் கொடுக்க வேண்டும். முட்டையை முதன்முதலில் கொடுக்கும்போது தோலில் தடிப்புகள், வாந்தி, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்படுகின்றனவா என்பதை கவனிக்க வேண்டும்.

 

குழந்தைக்கு முட்டை ஒத்துக்கொண்டால், அதன் வயது மற்றும் உணவுத் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து கொடுக்கலாம். 7 முதல் 12 மாத குழந்தைகளுக்கு வாரத்திற்கு 2 முதல் 3 முட்டைகள் வரையும், ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை வரையும் உணவில் சேர்க்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

 

குழந்தைகளுக்கு புதிய உணவுகளை அறிமுகப்படுத்தும்போது ஒவ்வொன்றாகக் கொடுத்து உடலின் எதிர்வினையைக் கவனிப்பது அவசியம். முட்டையை நன்கு வேகவைத்தே கொடுக்க வேண்டும். ஏற்கெனவே ஒவ்வாமை பாதிப்பு இருந்தாலோ அல்லது கடுமையான ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட்டாலோ உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.