சனி, நவம்பர் 14, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பற்சொத்தை ஏற்பட இதுவும் முக்கிய காரணம்; பெற்றோர் கவனத்திற்கு!

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பற்சொத்தை ஏற்பட இதுவும் முக்கிய காரணம்; பெற்றோர் கவனத்திற்கு!

குழந்தைகளின் பால் பற்களில் உள்ள வெளிப்புற பாதுகாப்பு அடுக்கு பெரியவர்களின் பற்களை விட மென்மையாக இருப்பதால், அவை எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக அதிக அளவில் இனிப்புகள், சாக்லேட் மற்றும் பாக்கெட் குளிர்பானங்களை உட்கொள்வதால் பற்களில் பாதிப்பு ஏற்பட்டு, சிறு வயதிலேயே பற்சொத்தை உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. இத்தகைய உணவுப் பழக்கங்களைக் கட்டுப்படுத்துவது குழந்தைகளின் பல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.

 

அதேபோல், பால் குடித்த பிறகும் உணவு சாப்பிட்ட பிறகும் தண்ணீரால் வாயைக் கொப்பளிக்காமல் இருப்பதும் பற்களில் பாதிப்பு ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமையலாம். மேலும், பெரியவர்கள் பயன்படுத்திய கரண்டியால் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது, உணவை வாயால் ஊதி ஆறவைத்துக் கொடுப்பது போன்ற பழக்கங்களால் வாயில் உள்ள கிருமிகள் குழந்தைகளுக்குப் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும்போது தனித்த சுத்தமான கரண்டியைப் பயன்படுத்துவதுடன், உணவை ஊதி ஆறவைக்கும் பழக்கத்தையும் தவிர்ப்பது அவசியம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.